பெண்கள் எந்த மாதிரி ஆண்களுக்கு அதிகம் மயங்குவார்கள்?
ரொம்ப சிம்பிள்! ‘என்னைப் புரிந்து கொள்ள வேண்டும். என்னிடம் ஏராளமான அன்பு காட்ட வேண்டும். பொறுமை நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும். தூய்மையாக இருப்பது (HYGIENE) அவசியம்!’ என்றே எந்தப் புத்திசாலிப் பெண்ணும் விரும்புவாள்.

Advertisements

பொலிவூட் நடிகை சில்பா சிட்டிக்கும் (34) லண்டன் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுக்கும் நேற்று முன்தினம் (22-11-09) மும்பையில் திருமணம் நடைபெற்றது.

மண்டபத்திற்கு வருகை தரும் மணமகன்
மண்டபத்திற்கு வருகை தரும் சில்பா
வீதி உலா வரும் மணமக்கள்
திருமணத்தின் பின்

மொபைல் போனை அடுத்ததாக சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை பயன்படுத்தும் சாதனமாக இணையம் உருவாகியுள்ளது. அதிலும் புரோட்பான்ட் இணைப்பை இன்று பெரும்பாலும் அனைவருமே பயன்படுத்துகின்றனர் என்று சொல்வதில் தவறில்லை.

புரோட்பான்ட் இணைப்பில் பல வகை உண்டு. அதில் மொபைல் புரோட்பான்ட் ஆனது மிகவும் பிரபல்யம் பெற்ற ஒன்றாகும்.

இந்த புரோட்பான்ட் இணைப்பை கொள்வனவு செய்யும் போது பல விடயங்களை கவனிக்க வேண்டும். அதாவது இணைப்பின் வேகம், வாடகைக் கட்டணம், மொடம் என்று கூறப்படும் டொங்கானின் விலை, Coverage இன் நிலை போன்ற பல விடயங்களை கவனிக்க வேண்டும்.

(புரோட்பான்ட் சார்ந்த பல பதிவுகளை கடந்த காலங்களில் இந்த வலைப்பதிவில் இட்டுள்ளேன்)

சரி விடயத்திற்கு வருவோம், புரோட்பான்ட் இணைப்பின் வேகம் Mbps, Kbps போன்ற அளவுகளில் கணக்கிடப்படுகின்றன. புரோட்பான்ட் இணைப்பை கொள்வனவு செய்யும்போது இதன் வேகம் 1Mbps, 3.6 Mbps என்று கூறி விற்பனையாளர் விற்றுவிடுவார். பின்னர் இணையத்தில் மேயும்போது ஆமை வேகத்தில் பக்கங்கள் தோற்றுகின்றன எனப் புலம்புவதை விட புரோட்பான்ட் இணைப்பின் சரியான வேகத்தை அறிய கீழ்க் கண்ட வழிமுறைகளில் செல்லுங்கள்.

 

உங்களின் இணைப்பு எந்த வேகத்தில் செல்கின்றது, எத்தனை எம்.பி. பைலை எத்தனை நிமிடங்களில் பதிவிறக்கிக் கொள்ள முடியும் போன்ற பல பயனுள்ள தகவல்களை இந்த தளத்திலிருந்து அறிந்து கொள்ளலாம் .

www.speedtest.net என்ற தளத்திற்குச் சென்று Begin Test இதிலிருந்து உங்களின் சேவை வழங்குநரினால் குறிப்பிடப்பட்ட வேகத்தில் இணையம் தொழிற்படுகிறதா என்பதை உறுதி செய்துகொள்ளமுடியும்.

 

 

Free Broadband இணைப்பைப் பெற

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. (குறிப்பாக காதலர்களுக்கிடையில்) இந்தப் பிரச்சினை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு….

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மோர்னிங்’ன்னு ஒரு சின்ன SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபா செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விடயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..
2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்’ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வைச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)

3. அவங்க பெயரோட முதல் எழுத்தை பைக் கீ-செயின்’ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க…


4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிடத்துக்கு ஒரு தடவை அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலொக் விடணும்’ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பெயர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வைச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கோல் பண்ண சொல்லுங்க. அந்தப் பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.

6. கவிதைங்கிற பெயர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்’ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. “நீ ரொம்ப அழகா இருக்கே”ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஓடர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஓடர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்’ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)


9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், “இந்த ட்ரஸ்’ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வைச்சிட்டு பொய் சொல்லணும்”. (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விடயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சினைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விடயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுவாங்க.

வவுனியாவிற்கு 200 ரூபா ரிக்கற் தந்தார். 450 ரூபாவுடன் கொழும்புக்கு கொண்டு சென்று விடமாட்டீர்களா என்று எனது நண்பர் வினவியபோது ”இல்லை தம்பி வவுனியா வரைக்கும் தான் எமது சேவை. நீங்களே தான் கொழும்பு சென்றால் என்ன, கண்டி சென்றால் என்ன” என கூறினார்.
நானும் நண்பனும் பிளான் போட்டோம் வவுனியாவிலிருந்து பஸ்ஸில் கொழும்பு போவோம் என்று. ஆனால் எனக்கு தெரிஞ்ச பெரிசு சொல்லிச்சு தம்பி மாரே நீங்கள் பஸ்ஸில் போறது ஒன்றுமில்லை. செக்கிங் ஒவ்வொரு நேரமும் ஒரு மாதிரி இருக்கும். ஒரு தடவை செக்கிங் இருக்கவே இருக்காது. சில நேரங்களில் 4,5 தடவை கூட செக்கிங் பண்ண வாய்ப்புகள் இருக்கின்றது.

என்ன குண்டா கொண்டு போறம் என்று எனது நண்பன் கேட்க ஏதோ உங்கள் இஸ்டம் தம்பி மாரே! என்று கூறியது. ஒரு தடவை செக்கிங் பண்ணுறபோவெ வெறுக்குது பல தடவை என்றால் அலுப்புதான் வரும். ரயிலில் செல்வோம் என்று 9.30 சிங்கள மஹா வித்தியாலயத்தில் இருந்து கொண்டே பிளான் போட்டோம்.
நேரமோ சரியாக 9.45 ஐ செல்போன் காட்டியது. அனைத்து பஸ்களுமே இயக்க நிலைக்கு கொண்டு வந்தார்கள். 9.50 க்கு ஒவ்வொரு பஸ்ஸாக புறப்பட்ட ஆரம்பித்தது. முதலில் இரு சொகுசு தனியார் பஸ்களும் அதற்கு பின்னால் CTB பஸ்களும் கிளம்பின. 10.30 மணிக்கு சாவகச்சேரி நகரை கடந்து சென்றது. 11.30 மணிக்கெல்லாம் கிளிநொச்சி நகரை கடந்து பஸ்கள் சென்ற வண்ணம் இருந்தன.
நானும் நண்பனும் ஒரு புறம் சைட்டால சைட் அடிக்கிறதும் மிகுதி நேரமெல்லாம் அழிவடைந்த நகரையும் கட்டடங்களையும் பார்வையிட்டுக் கொண்டடிருந்தோம்.

கிளிநொச்சி நகரில் பல கட்டடங்கள் அழிந்திருந்தாலும் சில கட்டடங்கள் அப்படியே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
முறிகண்டிப் பிள்ளையார் கோவிலில் நிறுத்தி கச்சான் வாங்குவோம் என்று பார்த்தால் பஸ்ஸின் சாரதி நிறுத்த மாட்டேன் நான் வவுனியாவில் தான் நிறுத்துவேன் என்று அடம்பிடித்தார்.
அவர் கூறியது போலவே யாழ்ப்பாணத்தில் ஏற்றிய எம்மை எந்த ஒரு இடத்திலுமே இறக்காமல் வவுனியா நகரில் சென்று அவிழ்த்து விட்டார்கள்.

உலகிலேயே மிகவும் பிரபல்யமானதும் அதிகமானோர் பயன்படுத்தும் முதல் 10 இணையத்தளங்களின் பட்டியலில் யூரியூப் எனப்படும் வீடியோ தளம் இடம் பிடித்துள்ளது. இந்த யூரியூப்பில் எந்த மாதிரியான வீடியோ கிளிப் வேண்டுமோ அந்த மாதிரியான விடயத்தை கூறினால் ஒரு சில நொடிப் பொழுதில் தேவையான வீடியோ காட்சியை எமக்கு காட்சிப்படுத்தும் மிகச் சிறந்த தளமாக யூரியூப் விளங்குகிறது.

youtube round

யூரியூப் தளத்தில் உங்களுக்குப் பிடித்த பாடல் காட்சியையோ அல்லது காமடி கிளிப் ஒன்றையோ அல்லது உங்களுக்கு தேவையான வீடியோ சொட் ஒன்றையோ பார்த்து விட்டீர்கள். அதனை நமது கணனியிலோ அல்லது மொபைல்லயோ பதிந்து வைக்க விரும்புகின்றீர்களா? அல்லது நீங்கள் விரும்பும் வீடியோ கிளிப்பை உங்கள் ஈமெயில் முகவரியில் சேமித்து வைக்க விரும்புகின்றீர்களா?

உங்களுக்கு உதவவென http://www.en.anjo.to எனும் இணையத்தளம் உள்ளது. அதுமட்டுமல்ல யூரியூப்பில் உள்ள வீடியோக்களை நாம் கேட்கும் போர்மட்டில் மாற்றி அமைத்து நம் ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க இந்த இணையத்தளம் உதவுகிறது.

youtube downloader

youtube

convber

untitled

யூரியூப்பில் காணப்படும் வீடியோ கிளிப்பினை சேமித்துக் கொள்ளசேமித்துக் கொள்ள விரும்பும் வீடியோ கிளிப்பினை யூரியூப்பில் இயக்கியவுடன் அருகில் இருக்கும் லிங்கை அதாவது யூரியூப் வீடியோ கிளிப்பின் தள முகவரியை (உதாரணமாக http://www.youtube.com/watch?vdhxijbf என்ற மாதிரி இருக்கும்) கொப்பி செய்யவும்.பின்னர், http://www.en.anjo.to என்ற முகவரிக்குச் சென்று அங்கு குறிப்பிட்டுள்ள Enter URL என்ற பகுதியில் நீங்கள் கொப்பி செய்த லிங்கை பிரதி (பேஸ்ட்) செய்த பின்னர் எந்த போர்மட்டில் வேண்டும் அதாவது வீடியோவாக அல்லது ஓடியோவாக வேண்டும் எனக் குறிப்பிட்டு send பட்டனைக் கிளிக் செய்யவும்.

Convert of Youtubeஎன்ற தலைப்பில் பரிசோதனை நிலையம் ஒன்று வரும், அதாவது இந்த வீடியோ பைலை மெயிலில் சேமித்து வைக்க விரும்பினால் மின்னஞ்சல் முகவரியை ரைப் செய்து செக்யூரிட்டி செக்பொக்ஸில் உள்ள கணக்கை பூர்த்தி செய்து விட்டு Online Convert என்ற பட்டனை கிளிக் செய்தவுடன் Conversion என்று ஓரிரு நிமிடங்களின் பின்னர் கென்வேர்ட் வெற்றிகரமாக முடிந்து விட்டது என்ற செய்தி வரும்.

youtube-screen

Download File என்பதில் ரைட் கிளிக் செய்து Save target as என்ற மெனுவை கிளிக் செய்தவுடன் எங்கு சேவ் செய்யப் போகின்றீர்கள் என்று கேட்கும். அதாவது கணனியிலான அல்லது பிளாஸ் ரைவிலா என்ற ஒப்ஷனில் தேவையான இடத்தை தெரிவு செய்து சேமித்துக் கொள்ளலாம்.

* யூரியூப்பில் வீடியோ காட்சிகளை பார்க்கும்போது சிறிது சிறிதாக இடைவெளி விட்டு விட்டுத்தான் அவை நமக்குக் கிடைக்கும். அதைத் தவிர்த்து டவுண்லோட் செய்திடும் பணியை வேகமாக மேற்கொள்ள SpeedBit Video Accelerator என்ற புரோகிராம் உதவுகிறது. இது Download Accelerator போலவே செயற்படுகிறது. இதனைப் பெற http://www.videoaccelerator.com என்ற தள முகவரிக்கு சென்றால் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


இணையத்தளத்தில் சம்பாதிக்க

ஏ-9 பாதையினூடாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நகரை வந்தடைவதென்பது மிக இலகுவானதும் செலவு குறைந்ததுமாகவே காணப்படுகின்றது.
அதாவது காலை 6 மணிக்கு யாழ்.புகையிரத நிலையத்திற்கு சென்றால் (முன்பதிவு செய்து டோக்கன் எடுக்க வேண்டியது என்பது அவசியமில்லை) 5, 6 பஸ்கள் நிற்கும்.
ஏற்கனவே பஸ் நிலையத்தில் பதிவு செய்து எடுத்த டோக்கனை காட்டி பெட்டி, சட்டிகளுடன் பஸ்ஸில் ஏறினால் சிறிய மட்டைத் துண்டு அதுதான் பாஸ் ஒன்று தருவார்கள். 2 நிமிட ஓட்டத்தின் பின் இறக்கி வளவொன்றில் விட்டுட்டு சிங்கள மகா வித்தியாலயத்திற்கு வரிசையில் பரிசோதனைக்காக ஒவ்வொருத்தராக விடுவார்கள்.
SRILANKA/
ரயில் நிலையத்தில் வழங்கப்பட்ட பாஸ்ஸை ஒப்படைத்துவிட்டு உடல் பரிசோதனை நடைபெறும். அது முடிந்த பின் பெட்டி படுக்கைகளின் பரிசோதனை நடைபெறும். அது முடிந்த பின் கிளியரன்ஸ்ஸை வாங்குவார்கள். அங்கு ஒரு சிறிய பதிவு எங்கு போகின்றீர்கள், செல்வதற்கான காரணம் என வினாவுவார்கள். அதை முடித்த பின் அடையாள அட்டையின் போட்டோ பிரதியை கேட்பார்கள். அதில் சிவில் அலுவலகத்தின் சீல் அடித்து தருவார்கள்.
அதன் பின்னர் மீண்டும் அதேபோல் சிறிய பதிவு. இவ்வளவும் முடிக்கும் போது நேரமோ காலை 8.45 ஆகிவிட்டது. 10 போக்குவரத்து சபையின் பஸ்களும் இரு தனியார் சொகுசு பஸ்களும் சேவையில் ஈடுட்டிருந்தது. (இந்த எண்ணிக்கையானது பயணிகளின் எண்ணிக்கையை வைத்து வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.)
பதிவுகளை முடித்த பின்னர் கொட்டகைக்குள் இருக்க வேண்டியது தான். ஒருபுறம் பஸ்கள் வரிசையில் நிற்கும். எல்லோரையும் பதிவு செய்து முடித்த பின்னர் பஸ்களில் ஏறச் சொல்லுவார்கள். அடிபட்டு பிடிபட்டு பஸ்களில் தொங்குவார்கள். போதியளவு பஸ்கள் இருக்கின்றது. இடம் கிடைக்கும் தானே, ஏன் அடிபட்டு ஏறவேண்டும் என்று நம்ம யாழ்ப்பாண தமிழன் யோசிப்பதில்லை! அது தான் கவலையளிக்கிறது. 9.15 மணி ஆகிவிட்டது. பஸ்களில் ஏறி அமர்ந்து கொண்டோம். கொன்டக்டர் ரிக்கட் போட்டுக் கொண்டு உடனயே வந்து விட்டார்.
*  யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான நடைமுறை – 1
ஏ-9 பாதையினூடாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நகரை வந்தடைவதென்பது மிக இலகுவானதும் செலவு குறைந்ததுமாகவே காணப்படுகின்றது. அதாவது காலை 6 மணிக்கு யாழ்.புகையிரத நிலையத்திற்கு சென்றால் (முன்பதிவு செய்து டோக்கன் எடுக்க வேண்டியது என்பது அவசியமில்லை) 5, 6 பஸ்கள் நிற்கும். ஏற்கனவே பஸ் நிலையத்தில் பதிவு செய்து எடுத்த டோக்கனை காட்டி பெட்டி, சட்டிகளுடன் பஸ்ஸில் ஏறினால் சிறிய மட்டைத் துண்டு அதுதான் பாஸ் ஒன்று தருவார்கள். 2 நிமிட ஓட்டத்தின் பின் இறக்கி வளவொன்றில் விட்டுட்டு சிங்கள மகா வித்தியாலயத்திற்கு வரிசையில் பரிசோதனைக்காக ஒவ்வொருத்தராக விடுவார்கள்.
ரயில் நிலையத்தில் வழங்கப்பட்ட பாஸ்ஸை ஒப்படைத்துவிட்டு உடல் பரிசோதனை நடைபெறும். அது முடிந்த பின் பெட்டி படுக்கைகளின் பரிசோதனை நடைபெறும். அது முடிந்த பின் கிளியரன்ஸ்ஸை வாங்குவார்கள். அங்கு ஒரு சிறிய பதிவு எங்கு போகின்றீர்கள், செல்வதற்கான காரணம் என வினாவுவார்கள். அதை முடித்த பின் அடையாள அட்டையின் போட்டோ பிரதியை கேட்பார்கள். அதில் சிவில் அலுவலகத்தின் சீல் அடித்து தருவார்கள். அதன் பின்னர் மீண்டும் அதேபோல் சிறிய பதிவு. இவ்வளவும் முடிக்கும் போது நேரமோ காலை 8.45 ஆகிவிட்டது. 10 போக்குவரத்து சபையின் பஸ்களும் இரு தனியார் சொகுசு பஸ்களும் சேவையில் ஈடுட்டிருந்தது. (இந்த எண்ணிக்கையானது பயணிகளின் எண்ணிக்கையை வைத்து வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.)
பதிவுகளை முடித்த பின்னர் கொட்டகைக்குள் இருக்க வேண்டியது தான். ஒருபுறம் பஸ்கள் வரிசையில் நிற்கும். எல்லோரையும் பதிவு செய்து முடித்த பின்னர் பஸ்களில் ஏறச் சொல்லுவார்கள். அடிபட்டு பிடிபட்டு பஸ்களில் தொங்குவார்கள். போதியளவு பஸ்கள் இருக்கின்றது. இடம் கிடைக்கும் தானே, ஏன் அடிபட்டு ஏறவேண்டும் என்று நம்ம யாழ்ப்பாண தமிழன் யோசிப்பதில்லை! அது தான் கவலையளிக்கிறது. 9.15 மணி ஆகிவிட்டது. பஸ்களில் ஏறி அமர்ந்து கொண்டோம். கொன்டக்டர் ரிக்கட் போட்டுக் கொண்டு உடனயே வந்து விட்டார்.

கடந்த மாதம் நல்லூர் திருவிழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு கப்பல் மூலம் சென்றிருந்தேன். மீண்டும் கொழும்புக்கு ஏ-9 வீதியினூடாகவே வந்தேன். அப்போது இருந்த நடைமுறைகள் பற்றிய முழுமையான விபரங்களை எனது வலைப்பதிவில் சிறு சிறு பதிவாக இட முயற்சிக்கின்றேன்.

ஏ-9 வீதியினூடாக பிரயாணம் செய்வதென்பது முன்னரைப் போல் போல் இலகுவானதாக அமையவில்லை என்றாலும் மிகவும் குறைந்த செலவுடன் இப்பொழுது பிரயாணத்தை மேற்கொள்ள முடியும்.

காலை 6 மணிக்கு வீட்டிலிருந்து புறபடுவோமானால் அன்றிரவே கொழும்பு நகரை சென்றடைந்து விடலாம் என்பது சந்தோஷமான விடயம் தான். ஆனால் கொழும்பிலிருந்து காலை புறப்பட்டால் அன்றிரவே யாழ்ப்பாணத்தை சென்றடைந்து விடலாம் என்று நினைத்துவிடாதீர்கள்.
அதில் ஒரு சில நடைமுறை சிக்கல்கள் உள்ளது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. கடந்த மாதம் நண்பர்களுடன் எனது ஊரிற்கு சென்றிருந்தேன். அப்போது இருந்த நடைமுறைகள் பற்றியே இந்த பதிவில் குறிப்பிடுகின்றேன்.

SRI LANKA-UNREST-KILINOCHCHI
கொழும்பிலிருக்கும் மக்கள் வவுனியாவினூடாக யாழ்ப்பாணம் செல்ல முடியும் என்று பத்திரிகைகளில் செய்திகளை கண்குளிர காணக்கூடியதாகவே இருந்தது. எனினும் யாழ்ப்பாணம் செல்பவர்கள் திரும்பி கொழும்பு வருவதென்றால் கிளியரன்ஸ் என்ற தலைவலியை எடுத்துக் கொண்டு தான் வரவேண்டும் என்பதே நடைமுறை.
இதை கருத்திற் கொண்டு கொழும்பிலிருந்து யாழ். செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் திருமலை சென்று கப்பல் மூலம் யாழ்ப்பாணத்திற்கான பிரயாணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏன் தெரியுமா? கப்பலில் செல்பவர்களுக்கு கிளியரன்ஸ் வழங்கப்படுவதால் ஒரு வழிப் பயணத்தை கப்பல் மூலமாகவும் (கப்பலில் வந்ததற்கான ஆதாரமான கப்பல் ரிக்கட்டும் அதன் பின்னால் குத்தப்பட்டிருக்கும் கிளியரன்ஸ்ஸையும் யாழ். சிங்கள மகா வித்தியாலயத்தில் ஒப்படைத்துவிட்டு) பஸ் மூலமும் யாழ்-கொழும்பு பிரயாணங்களை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இணையத்தளத்தில் சம்பாதிக்க

1989 ஆம் ஆண்டு ஜுலை 13ஆம் திகதி கொழும்பில் கொலை செய்யப்பட்ட அமிர்தலிங்கத்தின் நினைவு தினத்தையொட்டியே இப்பதிவை இடுகின்றேன்.

1949: தமிழரசுக் கட்சி நிறுவுதல். மத்திய செயற்குழு உறுப்பினரானார்.
1952: முதல் தேர்தல்களம். வட்டுக்கோட்டையில் வீரசிங்கம் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
1953: தமிழரசுக் கட்சி வாலிப முன்னணி உதயம் – அதன் முதல் தலைவர்.
1954: ஜுலை திருமணப்பதிவு. அன்றே மாலையில் கரவெட்டியில் நடைபெற்ற பொது மேடைக்கருத்தரங்கில் வி.பொன்னம்பலத்துடன் கருத்துப்போர்.
1954: இலங்கைத் தமிழர் சரித்திரத்தில் முதல் கறுப்புக் கொடி போராட்டம். சேர் ஜோன் கொத்தலாவலைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் அடியுண்டார்.

1956: தேர்தல் வெற்றி. வட்டுக்கோட்டை தொகுதிப் பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்றார்.
1956: ஆனி 5ஆம் திகதி தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம். சிங்களக் காடையர்களால் தாக்குண்டு தலையில் காயத்துடன் அன்று மாலை பாராளுமன்றத்தில் பேச்சு.
1956: ஆனி 15 ஆம் திகதி தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தலைமகன் காண்டீபன் பிறந்தார்.

1956: ஜுலை 5 முதல் ஜுலை 16 வரை திருமலை யாத்திரை பொன்னாலையிலிருந்து திருமலை வரை நடந்த ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர்.
1957: எம்.பி.டி.ரொய்சாவுக்கு யாழ் புகையிரத நிலையத்தில் கறுப்புக் கொடி. பொலிஸாரால் தாக்கப்பட்டார்.

அ. அமிர்தலிங்கம்

1958 ஏப்ரல் 10 – சிங்கள சிறீ எதிர்ப்புப் போராட்டத்தில் கைதாகி 14 நாட்கள் சிறை தண்டனை – யாழ் கோட்டை சிறையில் அடைப்பு.

1958 மே – ஊரடங்குச் சட்டம் அமுலாகியிருந்தபோது யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு தோணியில் செல்லுதல். மட்டக்களப்பில் கைதாகி கொழும்பு கொண்டு செல்லப்பட்டு 4 மாதம் தடுப்புக் காவலில் வைக்கப் பெற்றார்.
1958 நவம்பர் – தீண்டாமை ஒழிப்பு மாதம் ஆலய, தேனீர்க் கண்ட பிரவேசம்.
1959 ஜுன் 2ஆம் நாள் இரண்டாவது மகன் பகீரதன் பிறப்பு.

1960 மார்ச் பொதுத் தேர்தலில் வட்டுக்கோட்டைப் பிரதிநிதியாக வெற்றிபெற்று பாராளுமன்றம் செல்லுதல்.
1960 ஜுலை பொதுத் தேர்தலில் வட்டுக்கோட்டைப் பிரதிநிதியாக வெற்றிபெற்று பாராளுமன்றம் செல்லுதல்.
1961 தனிச்சிங்களச் சட்ட அமுலை எதிர்த்து தமிழ்பிரதேசமெங்கும் அரச தலைமையலுவலகம் முன் (கச்சேரி) சத்தியாக்கிரகம். தமிழரசு தபால் சேவை நடத்தப்பட்டது.

1961 சத்தியாக்கிரகத்தை முறியடிக்க கணவன் மனைவி இருவரும் ஏனைய தமிழ்த் தலைவர்களுடன் கைது. 6 மாதம் தடுப்புக் காவல் – பனாகொடை இராணுவமுகாமில்.
1961 ஒக்டோபரில் தடுப்புக் காவலிலிருந்து விடுதலை.
1963 ரி.பி.இலங்கரட்னாவுக்கு யாழ்ப்பாணத்தில் கறுப்புக்கொடி – பொலிஸாரால் தாக்கப்பட்டார்.

1965 மார்ச் பொதுத் தேர்தல் – வட்டுக்கோட்டை பாராளுமன்றப் பிரதிநிதியாக 11,000க்கும் மேற்பட்ட வாக்குகளில் வெற்றி பெற்றார்.
1966 2ஆவது அனைத்துலகத் தமிழராய்ச்சி மாநாடு மலேசியாவில் பங்குபெறுதல்.
1967 கட்சியைப் பலப்படுத்துவதிலும் பண்டா – செல்வா ஒப்பந்த அரசியல் நடவடிக்கைகளிலும் பங்குபெறுதல்.
1968 மலையகமெங்கும் இலங்கை தொழிலாளர் கழக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சுற்றுப்பயணம்.

1969 தமிழரசுக் கட்சியின் செயலாளராக உருவில் 11வது மாநாட்டில் தெரிவானார்.
1970 பொதுத் தேர்தல் – வட்டுக்கோட்டையில் 500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
1971 பிப்ரவரி 7ஆம் நாள் தமிழர் இயக்கங்கள் வல்வெட்டித்துறையில் ஒன்றுபட்ட போது முன்னின்று செயற்பட்டார்.
1972 மே 14ஆம் நாள் தமிழர் கூட்டனி திருமலையில் உதயமாக முன்நின்று உழைத்தார்.

1972 மே 22 புதிய அரசியலமைப்புச் சட்டத்தை யாழ். நாவலர் மண்டபத்தில் தீக்கிரையாக்கினார்.
1973 மல்லாகம் மாநாட்டில் 7.9.1973 அன்று தமிழரசுக்கட்சியின் 6ஆவது தலைவராக ஏகமனதாகத் தெரிவு.
1974 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது அதன் வெற்றிக்கு தீவிரமாக உழைத்தவர்.

1975 வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி மாநாடும் தனது நீண்டகாலக் கனவான தமிழீழ இலட்சியத்தை முன்னெடுத்து மாநாட்டுத் தீர்மானமாக நிறைவேற்ற பாடுபட்டார். வெற்றியும் கண்டார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதல் இணைச்செயலாளர் நாயகங்களாக திரு.சிவசிதம்பரமும், இவரும் தெரிவானார்கள். இதைத் தொடர்ந்து இறக்கும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகமாகத் திகழ்ந்தார்.

1975 வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை துண்டுப் பிரசுரமாக விநியோகித்தமைக்காகக் கைதாகி – ‘Trailat Bar’ என்ற சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். தடுப்புக்காவலில் இரண்டு மாதங்கள் வைக்கப்பட்டார்.
1975 ‘Trailat Bar’ நீதிமன்றம் அதிகாரமற்றது என்ற தீர்ப்பைத் தொடர்ந்து விடுதலையானார்.

1975 சட்டமறுப்பில் சிறைசென்ற திரு. ஆனந்தசங்கரியையும் ஏனைய தொண்டர்களையும் விடுதலையாகி வரவேற்கச் சென்ற போது யாழ்கோட்டை பொலிஸ் நிலையம் முன்னால் தாக்கப்பட்டார்.
1977 தந்தை செல்வாவின் மரணத்தைத் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகமாக தெரிவானார்.
1977 ஜுலை தேர்தல் காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்டு இலங்கை பாராளுமன்றத்திற்கு தெரிவானார். பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவானர்.

 amir-2007

1977 ஓகஸ்டு யாழ் பஸ்நிலையத்தில் பொலிஸாரால் தாக்கப்பட்டார்.
1978 இந்தியா விஜயம், தமிழீழப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டிலும் டெல்லியிலும் பிரச்சாரம்.
1978 இங்கிலாந்தில் Co-ordinating Coaaitee நிறுவுதல். (தமிழர் ஒருங்கிணைப்புக் குழு)
1981 பொலிசாரின் யாழ் நூல்நிலைய எரிப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலக எரிப்பு,

1982 Coaan Wealth Conference – Nogria பங்கேற்பு
1982 அமெரிக்க மசற்சுசெற் தமிழீழ தீர்மான பத்திரத்தைப் பெறல்.
1983 ஜனவரி 5வது உலகத்தமிழ்மாநாடு. மதுரை பிரதானப் பேச்சாளர்.
1983 ஜுலை கலவரத்தைத் தொடர்ந்து மாறுவேடத்தில் கொழும்பு வந்து இந்தியாவிற்கு செல்லல்.

1983 (தொடர்) தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு நிலைமையை எடுத்துரைத்தபின் டெல்லி சென்று அன்னை இந்திராவைச் சந்தித்தார். (ஆகஸ்ட் 13) ஆகஸ்ட் 14 – சர்வதேச பத்திரிகையாளர்களின் சந்திப்பு – வெற்றிகரமாக நடந்தேறியது. ஆகஸ்ட் 15 – இந்திய குடியரசு தின விழாவில் அரச பிரதிநிதியாக பங்கேற்பு.
1983 அக்டோபர் இங்கிலாந்திற்கும் ஏனைய மேற்குலக நாடுகளுக்கும் சென்று இந்தியாவின் பங்களிப்பு பற்றியும் பிரசாரம்.
1983 பிரிவினைக்கெதிரான உறுதிப்பிரமாணம் செய்ய மறுத்து பாராளுமன்றப் பதவியையும் எதிர்க்கட்சித்தலைவர் பதவியையும் தூக்கி வீசுதல்.
1984 கொழும்பில் வட்ட மேசை மாநாடு, பு.பார்த்தசாரதியின் (Special envoy) அனுசரணையுடன்.

1985 திம்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்று தமிழர் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்வைத்தல்
1986 இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஏற்று அதற்கு ஆதரவாகப் பிரச்சாரம்.
1987 இந்தியாவில் இருந்து மீண்டும் கொழும்பு திரும்புதல்
1988 பாராளுமன்றத் தேர்தல் மட்டக்களப்பில் போட்டியிட்டு பின் தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் செல்லல்.

1989 இந்திய இலங்கை ஒப்பந்த நடைமுறை பற்றிய பங்களிப்பு.
1989 ஜுலை 13ஆம் நாள் கொழும்பில் கொலை செய்யப்படல்.

 (இறக்கும்போது வயது 62)

அ.அமிர்தலிங்கம் பற்றிய வாழ்க்கை குறிப்பு

பிறப்பு : 26.08.1927
இடம் : இலங்கை – வட மாகாணம்
வலிமேற்கில் உள்ள பண்ணாகம்.
தந்தை : சின்னட்டியார் அப்பாப்பிள்ளை (1879 – 1952) ஸ்டேசன் மாஸ்டர் மலேசியா.

1925 – 1940 வரை சங்கானை கிராமசபை உறுப்பினர் பண்ணாகம் மெய்கண்டான் பரிபாலன சபையில் சமூக சேவை.
தாய் : வள்ளியம்மை அப்பாப்பிள்ளை
ஆரம்பக்கல்வி : 1931 முதல் 1936 வரை பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம்,
இடைநிலைக்கல்வி : 1936 முதல் 1946 வரை சுழிபுரம் விக்ரோரியாக் கல்லூரி,
1946இல் இக்கல்லூரியிலிருந்து முதன்முதலில் பல்கலைக்கழகம் சென்ற மாணவர் என்ற பெருமையை அமிர்தலிங்கம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகம் : 1946 முதல் 1948 B.A. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
சட்டக்கல்லூரி : 1948 முதல் 1951 வரை முதல் வகுப்பில் சித்தியடைந்தார். சட்டக்கல்லூரி தமிழ்ச் சங்கத்தை 1950இல் ஸ்தாபித்தார். அதன் தலைவராக 1950 – 1951இல் கடமையாற்றினார். 1951இல் நியாயவாதியாகத் திறமைச் சித்தி எய்தினார்.

 

இணையத்தளத்தில் சம்பாதிக்க

Older Posts »

Categories