Posted by: KT. Sarangan | September 13, 2009

யூ-ரியூப்பில் வீடியோ கிளிப்பினை சேமித்துக் கொள்ள

உலகிலேயே மிகவும் பிரபல்யமானதும் அதிகமானோர் பயன்படுத்தும் முதல் 10 இணையத்தளங்களின் பட்டியலில் யூரியூப் எனப்படும் வீடியோ தளம் இடம் பிடித்துள்ளது. இந்த யூரியூப்பில் எந்த மாதிரியான வீடியோ கிளிப் வேண்டுமோ அந்த மாதிரியான விடயத்தை கூறினால் ஒரு சில நொடிப் பொழுதில் தேவையான வீடியோ காட்சியை எமக்கு காட்சிப்படுத்தும் மிகச் சிறந்த தளமாக யூரியூப் விளங்குகிறது.

youtube round

யூரியூப் தளத்தில் உங்களுக்குப் பிடித்த பாடல் காட்சியையோ அல்லது காமடி கிளிப் ஒன்றையோ அல்லது உங்களுக்கு தேவையான வீடியோ சொட் ஒன்றையோ பார்த்து விட்டீர்கள். அதனை நமது கணனியிலோ அல்லது மொபைல்லயோ பதிந்து வைக்க விரும்புகின்றீர்களா? அல்லது நீங்கள் விரும்பும் வீடியோ கிளிப்பை உங்கள் ஈமெயில் முகவரியில் சேமித்து வைக்க விரும்புகின்றீர்களா?

உங்களுக்கு உதவவென http://www.en.anjo.to எனும் இணையத்தளம் உள்ளது. அதுமட்டுமல்ல யூரியூப்பில் உள்ள வீடியோக்களை நாம் கேட்கும் போர்மட்டில் மாற்றி அமைத்து நம் ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க இந்த இணையத்தளம் உதவுகிறது.

youtube downloader

youtube

convber

untitled

யூரியூப்பில் காணப்படும் வீடியோ கிளிப்பினை சேமித்துக் கொள்ளசேமித்துக் கொள்ள விரும்பும் வீடியோ கிளிப்பினை யூரியூப்பில் இயக்கியவுடன் அருகில் இருக்கும் லிங்கை அதாவது யூரியூப் வீடியோ கிளிப்பின் தள முகவரியை (உதாரணமாக http://www.youtube.com/watch?vdhxijbf என்ற மாதிரி இருக்கும்) கொப்பி செய்யவும்.பின்னர், http://www.en.anjo.to என்ற முகவரிக்குச் சென்று அங்கு குறிப்பிட்டுள்ள Enter URL என்ற பகுதியில் நீங்கள் கொப்பி செய்த லிங்கை பிரதி (பேஸ்ட்) செய்த பின்னர் எந்த போர்மட்டில் வேண்டும் அதாவது வீடியோவாக அல்லது ஓடியோவாக வேண்டும் எனக் குறிப்பிட்டு send பட்டனைக் கிளிக் செய்யவும்.

Convert of Youtubeஎன்ற தலைப்பில் பரிசோதனை நிலையம் ஒன்று வரும், அதாவது இந்த வீடியோ பைலை மெயிலில் சேமித்து வைக்க விரும்பினால் மின்னஞ்சல் முகவரியை ரைப் செய்து செக்யூரிட்டி செக்பொக்ஸில் உள்ள கணக்கை பூர்த்தி செய்து விட்டு Online Convert என்ற பட்டனை கிளிக் செய்தவுடன் Conversion என்று ஓரிரு நிமிடங்களின் பின்னர் கென்வேர்ட் வெற்றிகரமாக முடிந்து விட்டது என்ற செய்தி வரும்.

youtube-screen

Download File என்பதில் ரைட் கிளிக் செய்து Save target as என்ற மெனுவை கிளிக் செய்தவுடன் எங்கு சேவ் செய்யப் போகின்றீர்கள் என்று கேட்கும். அதாவது கணனியிலான அல்லது பிளாஸ் ரைவிலா என்ற ஒப்ஷனில் தேவையான இடத்தை தெரிவு செய்து சேமித்துக் கொள்ளலாம்.

* யூரியூப்பில் வீடியோ காட்சிகளை பார்க்கும்போது சிறிது சிறிதாக இடைவெளி விட்டு விட்டுத்தான் அவை நமக்குக் கிடைக்கும். அதைத் தவிர்த்து டவுண்லோட் செய்திடும் பணியை வேகமாக மேற்கொள்ள SpeedBit Video Accelerator என்ற புரோகிராம் உதவுகிறது. இது Download Accelerator போலவே செயற்படுகிறது. இதனைப் பெற http://www.videoaccelerator.com என்ற தள முகவரிக்கு சென்றால் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


இணையத்தளத்தில் சம்பாதிக்க


Leave a comment

Categories